மதுரை
தமிழகத்தில் பிரபல முஸ்லிம் மத அறிஞராக இருந்த பி ஜெயினுலாபுதீன் என்பவர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் என்ற அமைப்பின் நிறுவனராக இருந்து வந்தார். இந்நிலையில் பாலியல் குற்றச்சாட்டுகளால் அந்த அமைப்பிலிருந்து அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நடவடிக்கை எடுத்து நீக்கப்பட்டார்.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தில் இருந்து P, ஜெயினுலாபுதீன் நீக்கப்பட்ட பின்பு, தேசிய தவ்ஹீத் பேரவை என்கிற புதிய அமைப்பைத் தொடங்கினார். அந்த அமைப்பின் சார்பாக கடந்த ஞாயிறன்று சென்னை மண்ணடியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில், இப்பொது கூட்டத்தின் போஸ்டரை அப்துல்லா என்பவர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தலைமையகத்தில் ஓட்டியுள்ளார்.
இதுகுறித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் வடசென்னை மாவட்ட துணைத்தலைவர் காஜா மைதீன் என்பவர் போஸ்டர் ஒட்டிய அப்துல்லாவிடம் எங்கள் ஜமாத் அலுவலகத்தில் ஏன் போஸ்டர் ஒட்டினீர்கள் என்று கேட்ட போது, அதற்கு அப்துல்லா என்பவர் P, ஜெயினுலாபுதீனுடைய தூண்டுதலின் பேரில் ஆபாசமாக பேசி தவ்ஹீத் ஜமாத்தினுடைய மாநில நிர்வாகிகளை கழுத்தை அறுத்து விடுவேன் என்று மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.இச்சம்பவம் குறித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் வடசென்னை மாவட்ட துணைத்தலைவர் காஜாமைதீன் எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் பேரில் அப்துல்லா மற்றும் P, ஜெயினுலாபுதீன் ஆகியோர் மீது ஆபாசமாக பேசுவது, கொலை மிரட்டல் விடுப்பது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.