நேதாஜீ ஆதரவற்றோர் அறக்கட்டளை குழந்தைகள் விதை பந்துகள் தயாரிக்கும் பணிகள் மும்முரம்

கம்பம்.


தேனி மாவட்டம் கம்பம் நேதாஐஜீ ஆதரவற்;றோர் அறக்கட்டளை இல்லக் குழந்தைகள் விதை பந்துகள் தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனார்.தேசிய நெடுஞ்சாலைகளில் சாலை விரிவாக்கம் செய்வதால் சாலை ஓரத்தில் இருக்கும் மரங்கள் ஏராளமாக அழிக்கப்பட்டு விட்டது.இதனால் சுற்றுச் சுழலை பாதுகாக்கும் வகையிலும் மரங்களின் அவசியம் கருதியும் கம்பம் நேதாஐஜீ அறக்கட்டளையின் இல்லக் குழந்தைகள் விதைப்பந்துகள் தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.புவரசு வேம்பு விதைகளை செம்மண் சாணம் கொண்டு உருவாக்கப்பட்ட மண்ணில் வைத்து விதைப்பந்துகள் உருவாக்கப்பட்டு வருகிறது.இந்த விதைப்பந்துகள் நீர் நிலைகளின் ஓரங்களில் வீசப்பட்டு வருகிறது.இதற்கான ஏற்பாடுகளை கம்பம் நேதாஐஜீ அறக்கட்டளை பணியாளர்கள் அபிராமி மற்றும் விஐயா ஆகியோர் செய்து வருகின்றனர்.