திருக்கோவிலூர்
பள்ளிக் கல்வித் துறையின் விழுப்புரம் மாவட்ட பொது நூலக இயக்ககம் சார்பில், ஞாயிற்றுகிழமை நடைபெற்ற 71 ஆவது குடியரசு தின விழாவில் திருக்கோவிலூர் அடுத்த ஆலூர் ஊாரட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி -மாணவிக்கு "இளம் படைப்பாளர்' விருதுகள் வழங்கப்பட்டன.
சட்டப்பேரவையில் பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கையின்போது, "பள்ளி மாணவ, மாணவிகளின் சிந்தனைத் திறன், பேச்சாற்றல், எழுத்தாற்றலை மேம்படுத்தவும், ஊக்குவிக்கவும் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் 2018 முதல் பேச்சு, கட்டுரை, கவிதை போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு பிரிவிலும் மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு "இளம் படைப்பாளர்' விருது வழங்கப்படும்' என அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதையடுத்து, இந்த விருதுகளுக்கு பொது நூலக இயக்ககம் சார்பில் 2019-2020 ஆண்டுக்கான போட்டியில் எட்டாம் வகுப்பு மாணவி வெ.மதுமிதா "மனதை திறக்கும் மந்திர சாவி நூலகம் என்ற தலைப்பில் எழுதிய கட்டுரை மாவட்ட அளவில் முதல் இடம் பிடித்தது.
முதல் இடம் பிடித்த மாணவியை பாரட்டி 71 ஆவது குடியரசு தின விழாவில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை இளம் படைப்பளார் விறுது வழங்கி பாராட்டு தெறிவித்தார்,உடன் விழுப்புரம் மாவட்ட காவல் கன்னானிப்பாளர் ஜெயக்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.