அதிமுக ஆட்சியில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஜெயலலிதா

அதிமுக ஆட்சியில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய நான்கு பேர் மீது வழக்கு தொடரப்பட்டது.


இந்த வழக்கில் நீதிபதி குன்ஹா வழங்கிய தீர்ப்பை எதிர்த்த மேல் முறையீட்டு வழக்கில் இவர்கள் நால்வரையும் கர்நாடக உயர் நீதிமன்றம் விடுதலை செய்தது.

இந்த உத்தரவை எதிர்த்து கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில், நீதிபதி குன்ஹா வழங்கிய நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் அபராதம் உள்ளிட்ட தீர்ப்பை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம். ஆனால், அதற்கு முன்னதாகவே ஜெயலலிதா காலமானதால், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய நான்கு பேரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் கடந்த 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அடைக்கப்பட்டனர். அவரை டி.டி.வி.தினகரன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் அவ்வப்போது சிறையில் சென்று சந்தித்து வருகின்றனர்.