ரஜினி பெரியார் மீது மிகுந்த மரியாதை கொண்டவர் என்று இயக்குநரும், நடிகருமான ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
துக்ளக் பத்திரிகை விழாவில் பேசிய ரஜினிகாந்த் பெரியாரை அவமதித்துவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தன் பேச்சுக்காக ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பலரும் தெரிவித்தனர். ஆனால் அவரோ நான் எதையும் தவறாக பேசவில்லை அதனால் மன்னிப்பு கேட்க முடியாது, வருத்தம் தெரிவிக்கவும் முடியாது என்றார். இதையடுத்து ஆளாளுக்கு ரஜினியை விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.