பழவேற்காட்டில் நெகிழி மற்றும் சுற்றுப்புற தூய்மை விழிப்புணர்வு பேரணி : கலெக்டர் துவக்கி வைத்தார்

பழவேற்காட்டில் நெகிழி மற்றும் சுற்றுப்புற தூய்மை விழிப்புணர்வு பேரணி :  கலெக்டர் துவக்கி வைத்தார் : 


 பழவேற்காடு லைட்ஹவுஸ் குப்பம் பகுதியில் பள்ளிக்கல்வித்துறை சார்பாக, 300-க்கும் மேற்பட்ட மாணவர் காவல் படை பள்ளி மாணவர்களைக் கொண்டு, நெகிழி மற்றும் சுற்றுப்புற தூய்மை விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் துவக்கி வைத்து, கலந்துகொண்டார். 


 

இப்பேரணியில் கலந்துகொண்ட பள்ளி மணாவர்கள் சுற்றுச்சூழல் தூய்மை தொடர்பான விழிப்புணர்வு பதாகைகளை ஏந்து சென்று, வழிநெடுகிலும் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்து, நெகிழி பொருட்களின் பயன்பாட்டினை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பிச் சென்றனர். 
 

மேலும் மாணவர்களுடன் கடற்கரை பகுதிக்குச் சென்று கையுரை, முகமூடி, தொப்பி உள்ளிட்டவைகளை அணிந்துகொண்டு நெகிழி உள்ளிட்ட குப்பைகளை அகற்றும் பணிகளை மேற்கொண்டனர். சிறப்பாக குப்பைகளை அகற்றிய மாணவர்களை மாவட்ட ஆட்சியர் பாராட்டி நினைவு பரிசுகளை வழங்கினார்.  இப்பேரணி பழவேற்காடு பஜார் வீதியில் ஆரம்பித்து, கடற்கரை பகுதியில் நிறைவடைந்தது. 


பின்னர், முஸ்லீம் சிறுபான்மையினர் மகளிருக்கான திறன் பயிற்சி விழிப்புணர்வு மற்றும் வாழ்வாதார முகாமினை ஆட்சியர் துவக்கி வைத்து, முஸ்லீம் மகளிருடன் கலந்துரையாடி, திறன் வளர் தேவைப்படிவங்களை வழங்கினார். 


இறுதியாக பழவேற்காடு முகத்துவாரம் அருகில், மீன்வளத்துறை சார்பாக, செஞ்சியம்மன் நகர் பழங்குடி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மீன்வள நிலைத்த வாழ்வாதாரத் திட்டத்தின் கீழ் ஆளி வளர்ப்பு பகுதியினை ஆட்சியர் நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்தார். 

" alt="" aria-hidden="true" />

 

இதில் தமிழ்நாடு மாநில ஊரகம் மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநர் வை.ஜெயக்குமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெ.வெற்றிச்செல்வி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் அப்துல்பாரி, பொன்னேரி உதவி கண்காணிப்பாளர் பவன்குமார், இந்தியன் வங்கி மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஹெப்சூர் ரஹ்மான், மீன்வளத்துறை உதவி இயக்குநர் பஞ்சராஜா, மீன்வளத்துறை உதவி இயக்குநர் ஜி.அஜய் ஆனந்த், மாவட்ட தொழில் மையம் பொது மேலாளர் மணிவண்ணன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் திருவரசு, பொன்னேரி வட்டாட்சியர் மணிகண்டன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.